தமிழ்நாடு ரேஷன் கடைகளில், அத்தியாவசிய உணவு பொருட்கள் மலிவு விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அந்த கடைகள், சென்னை மற்றும் புறநகரில் காலை 8:30 மணி முதல் பகல் 12:30 மணி வரையும்; பிற்பகல், 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரையும் செயல்படுகின்றன. மற்ற மாவட்டங்களில் காலை 9:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரையும்; பிற்பகல், 2:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையும் செயல்படுகின்றன.
சென்னை மற்றும் புறநகரில் மதியம் ரேஷன் கடைகளை மூடி மீண்டும் திறப்பதற்கு, 2:30 மணி நேரம் இடைவெளி வழங்கப்படுகிறது. அந்த சமயத்தில் தான், ரேஷன் கார்டுதாரர்கள் வாங்காத பொருட்களை, சில ஊழியர்கள் கடைக்கு வெளியே அனுப்புவது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுவதாக கூட்டுறவு மற்றும் உணவு துறை உயர் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளனர். எனவே, ரேஷன் கடைகள் மதியம் மூடப்படும் நேரத்தை குறைக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகவுள்ளது.
Read More : உங்களுக்கு 30 வயது ஆகிவிட்டதா..?நீங்கள் இதை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்..? மறந்துறாதீங்க..!!