fbpx

Tips | பூச்சிகளிடம் இருந்து கோதுமை உள்ளிட்ட மாவுகளை பாதுகாக்க வேண்டுமா..? சூப்பர் ஐடியா..!!

மாவு என்றென்றும் நீடிக்கும் பொருளாக மக்கள் கருதுகின்றனர். அது தொழில்நுட்ப ரீதியாக சூரிய ஒளி, ஆக்ஸிஜன் மற்றும் ஈரப்பதத்திற்கு வெளிப்படும் போது கெட்டுப்போகும். பூச்சிகள் வரும். எனவே, பூச்சிகளிடம் இருந்து மாவை எப்படி பாதுகாக்கலாம் என்பது குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் உலர் பொருட்களை காற்று புகாத உணவு சேமிப்பு கொள்கலன்களில் சேமித்து வைப்பது நல்லது. காற்று புகாத பிளாஸ்டிக் பொருட்கள் அல்லது கண்ணாடி ஜாடியில் மாவை சேமித்து வைப்பது 10 மாதங்கள் வரை புத்துணர்ச்சியுடன் இருக்கும் மற்றும் பூச்சிகள் வருவதை தடுக்கும் என்று கூறப்படுகிறது. இனி கோதுமையுடன் கிராம்பு, வேப்பிலை, கல் உப்பு, போன்றவற்றை கலந்து வைத்தால் பூச்சி வருவது கட்டுப்படுத்தப்படும்.

நேரம் கிடைக்கும் போது எல்லாம் கொல்கலனில் இருந்து மாவை வெளியில் எடுத்து வெயிலில் காய வைக்க வேண்டும். பழைய மாவுடன் புதிய மாவு சேர்ப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். பழைய மாவில் வண்டு பிடிப்பது போல் இருந்தால் அதை புதிய மாவுடன் கலந்தால் அதுவும் மோசமாகி விடும். நீங்கள் கொட்டி வைக்கும் பாத்திரம் இறுக்கமான மூடியாக காற்று புகாதவாறு பார்த்துக்கொள்வது சிறந்தது.

Read More : ”இருக்குற பிரச்சனையில இது வேறயா..? ஓபிஎஸ் – பாஜக இடையே கடும் மோதல்..!! பெரும் பரபரப்பு..!!

Chella

Next Post

செல்போனை சார்ஜ் செய்யும்போது சூடாகிறதா..? அசால்ட்டா இருக்காதீங்க..!! வெடிக்கும் அபாயம்..!!

Wed Apr 17 , 2024
செல்போனை சார்ஜ் செய்யும்போது சூடாவதற்கான காரணம் மற்றும் அதனை எப்படி சரி செய்வது என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். பொதுவாக செல்போன்கள் சார்ஜ் செய்யும்போது சூடாவது இயல்பானது. ஆனால், போன் அதிகமாக சூடாக இருந்தால் அதில் பாரிய பிரச்சனை இருக்கும். அதேபோல் சில செல்போன்கள் சார்ஜ் போட்டவுடனே சூடாகும். இதற்கான காரணங்கள் என்னவென்று பார்ப்போம். நீங்கள் செல்போனில் ஒரு திரைப்படத்தைப் பார்க்கும்போதோ அல்லது கேம் விளையாடும்போதோ அல்லது ஏதேனும் […]

You May Like