”இருக்குற பிரச்சனையில இது வேறயா..? ஓபிஎஸ் – பாஜக இடையே கடும் மோதல்..!! பெரும் பரபரப்பு..!!

ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் தரப்பினருக்கும், பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

மக்களவை தேர்தலில் பாஜக ஆதரவுடன் ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக ஜேபி நட்டா உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைய உள்ள நிலையில், நேற்றிரவு சூரங்கோட்டை காலனி பகுதிக்கு ஓபிஎஸ் பிரச்சாரத்திற்கு சற்று தாமதமாக வந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, தொண்டர்களுடன் நீண்ட நேரம் காத்திருந்த ஓபிஎஸ் அணியின் ஒன்றிய செயலாளர் முத்து முருகன் என்பவர், ‘ஏன் இவ்வளவு காலதாமதமாக வருகிறீர்கள்..? என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு ராமநாதபுரம் பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன் பதிலளித்து கொண்டிருந்தபோது, அவரை முத்து முருகன் தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பாஜகவினர், ஓபிஎஸ் தரப்புடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இது குறித்து தகவல் அறிந்த பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் அங்கு குவிந்ததால் பரபரப்பு நிலவியது. மேலும், அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். ஏற்கனவே, சுயேட்சையாக போட்டியிடும் ஓபிஎஸ்-க்கு, 4 ஓபிஎஸ்கள் தலைவலியை ஏற்படுத்தி வரும நிலையில், பாஜகவுடன் தனது ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டிருப்பது அவருக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்று கூறப்படுகிறது.

Read More : வெறும் ரூ.500 முதலீடு செய்து லட்சங்களை அள்ளிச் செல்லுங்கள்..!! இந்த திட்டம் பற்றி தெரியுமா..?

Chella

Next Post

நாட்டில் மிகப்பெரிய பிரச்சனையே இதுதான்..!! மக்கள் சொல்வது என்ன..? வெளியானது சர்வே முடிவு..!!

Wed Apr 17 , 2024
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதனையொட்டி, அரசியல் கட்சியினர் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரமும் நிறைவுபெறுகிறது. அதற்கு மேல் பிரச்சாரம் செய்தால், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், விலைவாசி உயர்வை மிகப்பெரிய பிரச்சனையாக கருதுவதாக மேற்கு இந்தியாவில் வசிக்கும் 22% மக்கள் தெரிவித்துள்ளனர். […]

You May Like