ஒவ்வொரு பெண்ணிற்கு இருக்கும் ஒரே ஆசை, முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்பது தான். ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில், பல்வேறு காரணங்களால் பல பெண்களுக்கு முகம் முழுவதும் பருக்கள் மற்றும் தழும்புகள் தான் அதிகம் உள்ளது. இந்த சோகத்தில், பல ஆயிரங்கள் செலவு செய்து கண்ட கிரீம்களை வாங்கி பயன்படுத்தி விடுகின்றனர்.
இதனால் ஏற்படும் நன்மையை விட பக்க விளைவுகள் தான் அதிகம். ஆம், கிரீம்களில் உள்ள கெமிக்கல் முகத்தின் இயற்க்கை பொலிவை கெடுத்து விடும். இதனால் முடிந்த வரை இயற்கையான பொருள்களை வைத்து முகத்தை பராமரிப்பது நல்லது. அந்த வகையில், பல நூற்றாண்டுகளாக முகத்தில் பருக்களை ஏற்படுத்தும் கிருமிகளை போக்கி, அழகை மேம்படுத்த வேப்பிலை பயன்படுத்தப்படுகிறது.
வேப்பிலையை வைத்து முகத்தில் உள்ள பருக்களை நீக்க, முதலில் ஒரு கைப்பிடி
வேப்ப இலைகளை, 2 கப் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர், கொதித்த நீரை நன்கு குளிர்விக்க வேண்டும். அதன்பிறகு இந்த தண்ணீரை வடிகட்டி ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த நீரை பயனடுத்தி முகத்தை கழுவினால் முகத்தில் கரும்புள்ளிகள் நீங்கி, அற்புதமான பளபளப்பு கிடைக்கும்.
இதற்கு பதில், நீங்கள் 1 கைப்பிடி வேப்ப இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, பின்னர் குளிர்வித்து, அந்த நீரை வடிகட்டி, ஒரு ஐஸ் கட்டி தட்டில் ஊற்றி பிரிட்ஜில் வைத்து விடுங்கள். அந்த நீர் நன்கு உறைந்த கட்டியான பிறகு, அந்த கட்டியை ஒரு மெல்லிய சுத்தமான துணியில் சுற்றி, முகத்தில் மசாஜ் செய்யவும். இதனால் பருக்கள் நீங்குவது மட்டும் இல்லாமல், முகத்தில் இருக்கும் சிறு சிறு துளைகளும் மூடி விடும்.
ஐஸ் கட்டியால் சளி பிடிக்கும் என்று நீங்கள் நினைத்தால், வேப்பிலையை கொதிக்க வைத்த நீரில் நீங்கள் சுமார் 5-7 நிமிடங்கள் நீராவி எடுக்கலாம். வேப்பிலையிலிருந்து வரும் நீராவி துளைகளைத் திறந்து அழுக்குகளை நீக்கும். நீராவி எடுத்த பிறகு, துளைகளை மீண்டும் மூட முகத்தில் குளிர்ந்த நீரால் கழுவுவது அவசியம். இதனால், சளி இருந்தால் கூட குணமாகிவிடும்.
Read more: மாத்திரை வேண்டாம்! ரத்த அழுத்தத்தை குறைக்கும் சுவையான மருந்து இது தான்; ஆய்வில் வெளியான தகவல்..