தற்போது உள்ள கால கட்டத்தில், பலருக்கு இருக்கும் பெரிய பிரச்சனையே இளநரை தான். இதனால் இளம் வயதிலேயே வயதான தோற்றம் ஏற்படுகிறது. இது மட்டும் இல்லாமல், முடி உதிர்வு பிரச்சனையும் பலருக்கு உள்ளது. இதற்காக அதிக கெமிக்கல் நிறைந்த டை பயன்படுத்துவது முற்றிலும் தவறான ஒன்று. இதனால் பக்கவிளைவுகள் தான் அதிகம் ஏற்படும். இதனால் முடிந்த வரை இயற்கையான பொருள்களை வைத்து முடியை கருப்பாக மாற்றுவது நல்லது.
அந்த வகையல் முடி சம்மந்தமான பல பிரச்சனைகளுக்கு தேர்வு அளிக்க மருத்துவர் மைதிலி சிறந்த தீர்வு ஒன்றை பற்றி கூறியுள்ளார். இதற்கு முதலில், கெட்டியான தயிர் மற்றும் கருவேப்பிலை இரண்டையும் மிக்ஸியில் சிறிது தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும். பின்னர் அதில் சுவைக்கு தேவைப்பட்டால் சிறிது பெருங்காயத்தூள், சிறிது இந்துப்பு சேர்த்து கரைத்து தினமும் குடிக்கலாம்.
இதனால் முடி வளர்ச்சி அதிகமாக இருக்கும். மேலும், இதில் வைட்டமின் இ, இரும்புச்சத்து, வைட்டமின் சி போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. இதனால் முடி அடர்த்தியாக இருப்பது மட்டும் இல்லாமல், முடி உதிர்வும் குறைந்து விடும். மேலும், சருமத்தின் பொலிவும் அதிகரிக்கும். தோல் தங்கம் போல் பளபளப்பாகும். மேலும், தோலில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் மறைந்து விடும்.
இந்த பானத்தை பெரியவர்கள் மட்டும் இல்லாமல் குழந்தைகளும் குடிக்கலாம். இதனால் குழந்தைகளின் கண் பார்வை கூர்மையாவது மட்டும் இல்லாமல், மாலைக்கண் நோய் போன்ற சில பிரச்சனைகளும் வராமல் இருக்கும். மேலும், ரத்த சோகையால் அவதிப்படுபவர்கள் இந்த பானத்தை தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
Read more: கேன்சர் செல்களை அழிக்கும் அற்புத மருந்து; இந்த வேர் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..