fbpx

மழைக்காலத்தில், துணிகளில் துர்நாற்றம் வீசுகிறதா?? அப்போ இதை செய்து பாருங்கள்..

மழை காலம் வந்துவிட்டால், பலருக்கு இருக்கும் பெரிய பிரச்சனை, ஈர துணிகளை காய வைப்பது. வெயில் இல்லாததால் நாம் ஆடைகளை மின்விசிறி கீழ் துணிகளை காய வைப்போம். ஆனால் அப்படி செய்வதால் துணிகளில் துர்நாற்றம் வீசுவதோடு, வீடு முழுவதும் துர்நாற்றம் வீசும்.. இதை தவிர்க்க சில வழிகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்..

முதலில் துவைத்த துணிகளை, காற்றோட்டமான திறந்த இடத்தில் தொங்க விடுங்கள். பிறகு பேப்பரை கொண்டு துணிகளை மூடி விடுங்கள். பின்னர், டேபிள் பேனை துணிகள் இருக்கும் இடத்தில வைத்துவிடுங்கள். இது ஈரமான ஆடைகளின் ஈரப்பதத்தை உறிஞ்சி, துணிகளை விரைவாக உலர்த்தும். மேலும், இந்த பேப்பர்கள் துணியை முழுவதும் மூடும்படி இருப்பது அவசியம்.

வீட்டிற்குள் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதம், வீட்டை மட்டுமில்லாமல், அதில் வசிப்பவர்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். அதனால் துணி உலர்த்தும் அறைகளில் உள்ள ஈரப்பதத்தை கட்டுப்படுத்த ‘ஏர் பியூரிபையர் பேக்’ பயன்படுத்தலாம். இல்லையென்றால், ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை ஒரு துணியில் சிறு மூட்டை போல கட்டி அதை வீட்டில் வைக்கலாம். ஈரத்தை உறிஞ்சும் ஆற்றல் உப்புக்கு உண்டு. மழைக்காலங்களில் ஓரளவு காய்ந்த துணிகளை, அயர்னிங் மூலம் உலர்த்தலாம். இது துணிகளில் உள்ள ஈரத்தை எளிதில் உலர வைக்கும்.

துணிகளை உலர்த்தும் முன்பு, அதில் உள்ள தண்ணீர் முழுவதுமாக வடிந்துள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். வாஷிங் மிஷினில் நீங்கள் துணி துவைத்தால், அதிகபட்ச தண்ணீர் வடியும்வரை துணிகளை டிரையரில் போட்டு வைக்க வேண்டும். ட்ரையரில் லைக்ரா, நைலான், அக்ரிலிக், பாலியஸ்டர், விஸ்கோஸ் அல்லது ஸ்பான்டெக்ஸ் ஆகிய ஆடைகளை சிறிது நேரம் மட்டும் உலர வைக்கவும். உங்கள் ட்ரையர் உடனே துணிகளை உலர வைக்க, ஒவ்வொரு முறை அதனை பயன்படுத்திய பிறகும் நன்றாக சுத்தம் செய்யவும்.

வெயிலில் துணிகளை காய வைக்க முடியவில்லை என்றால், வீட்டில் உள்ள கம்பிகளில் காயவையுங்கள். ஆனால், ஜன்னல்கள் மற்றும் கதவுகளை திறந்து இருப்பதை உறுதி செய்யுங்கள்.

Maha

Next Post

குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி...! 13 மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை...!

Wed Oct 11 , 2023
தமிழகத்தில் இன்று 13 மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், […]

You May Like