திருநெல்வேலி – சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண கட்டணம் விவரம் வெளியாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி திருநெல்வேலி – சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை, செப்டம்பர் 24, 2023 ஞாயிற்றுக்கிழமை, டெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மதியம் 1.50 மணியளவில் சென்னை எழும்பூர் வந்தடைகிறது. மறுமார்க்கத்தில் மதியம் 2.40 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.40 மணிக்கு நெல்லை சென்றடைகிறது. இந்த ரயில், சென்னை எழும்பூருக்கு அடுத்தபடியாக விழுப்புரத்திலும், அதற்கு அடுத்தப்படியாக திருச்சியிலும் நின்று செல்லும். அதேபோல, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகரில் நிற்கும்.
இந்த ரயில் சராசரியாக 83.30 கி.மீ வேகத்தில் 652.49 கி.மீ 7.5 மணி நேரத்தில் பயணிக்கும் வகையில் இயக்கப்படும் இந்த ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி மற்றும் திருச்சிக்கு அப்பால் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிறுத்தங்களில் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலிக்கு வந்தே பாரத் ரயிலில் ஏ.சி.சேர்கார் பெட்டியில் பயணம் செய்ய கட்டணமாக ரூ.1,620 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எக்ஸிகியூட்டிவ் சேர்கார் கட்டணம் ஒருவருக்கு 3,025 ரூபாய்.சாதாரண சேர்கார் பயணிகளுக்கு உணவிற்காக 300 ரூபாயும், எக்சிகியூட்டிவு சேர்கார் பயணிகளுக்கு 370 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.