வாட்ஸ் ஆப் மூலம் தரிசன முன்பதிவு திட்டம் பரிசீலனையில் மட்டுமே உள்ளது என திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது. சைபர் குற்றவாளிகள் பக்தர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டு வருவதை அடுத்து திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு மாதமும் தரிசன டிக்கெட்டுகள் அறைகள் முன்பதிவு உள்ளிட்டவை ஆன்லைனில் வெளியிடும் போது தேவஸ்தானத்தின் சர்வர் ஒரு சில நேரத்தில் முடங்கி விடுகிறது. இதனால் ஜியோ கிளவுட் மேனேஜ்மென்ட் முறையில் ஜியோ நிறுவனத்துடன் சேர்ந்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் டிக்கெட் முன்பதிவு வெளியிடுகிறது.
அவ்வாறு இருப்பினும் ஒரு லட்சம் டிக்கெட்டுகளை வெளியிட்டால் 20 லட்சம் பக்தர்கள் அதனை பெறுவதற்காக முயற்சி செய்து வருகின்றனர். இதனால் பலர் ஏமாற்றம் அடைகின்றனர். அவ்வாறு உள்ள நிலையில் அரசின் வாட்ஸ்அப் செயலி மூலம் தேவஸ்தான டிக்கெட்டுகள் பெறுவதற்கு நடைமுறைப்படுத்தினால் தற்பொழுது உள்ள காலகட்டத்தில் அனைவரிடமும் வாட்ஸ்அப் செயலி உள்ளது. அனைவரும் டிக்கெட்டுகளை பெற முயற்சி செய்தால் அரசு சர்வர் பாதிக்கும் நிலை ஏற்படும்.
எனவே இது குறித்து எந்தவித முயற்சியும் பணிகளும் தொடங்கப்படாத நிலையில் பக்தர்கள் இதனை நம்ப வேண்டாம். அதிகாரப்பூர்வமாக வாட்ஸாப் செயலி மூலம் சேவைகள் தொடங்கப்பட்டால் திருமலை திருப்பதி தேவஸ்தானமும் அல்லது ஆந்திர மாநில அரசு அதிகாரப்பூர்வமாக ஊடகத்தின் மூலம் வெளியிடும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Read more : இந்தியாவில் எந்த மாநிலத்தில் பெண்கள் அதிகம் மது குடிக்கிறார்கள் தெரியுமா..? ஷாக் ரிப்போர்ட்