fbpx

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்..!! நேரில் தரிசிப்பதால் இவ்வளவு நன்மைகளா..? எவ்வளவு பெரிய பாவம் செய்திருந்தாலும் விமோசனம் கிடைக்கும்..!!

திருவண்ணாமலை என்றாலே அருணாசலேஸ்வரர், கிரிவலம், கிரிவலத்தை சுற்றி இருக்கும் கோயில்கள், கார்த்திகை தீபம் ஆகியவைகள் தான் நினைவுக்கு வரும். இது சித்தர்கள் பூமி என்றும், சிவனே மலையாக அமர்ந்திருப்பதால் கைலாயத்திற்கு இணையான தலம் என்றும் பக்தர்களால் போற்றப்படுகிறது. இங்குள்ள 14 கிலோ மீட்டர் தொலைவிலான சுற்றுவட்டப்பாதையில் தினமும் பொதுமக்கள் கிரிவலம் செல்கின்றனர். குறிப்பாக, மாதம்தோறும் பௌர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.

அந்த வகையில், இந்தாண்டு திருக்கார்த்திகை தீபம் வரும் 13ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக மலை மீது தீபம் ஏற்றப்படுகிறது. இந்த வைபவத்தை பார்க்க குறிப்பிட்ட அளவுக்கு பக்தர்கள் மலையேறி தீபத்தை காண அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில், பெஞ்சல் புயலால் திருவண்ணாமலையில் தீபம் ஏற்றும் மலைபாதையில் மண் சரிவு ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு ஆய்வு செய்த ஐஐடி குழுவினர், மண்ணின் ஸ்திரத்தன்மை குறைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், திருக்கார்த்திகை தீபத்தை மலையேறி போய் காண முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தீபம் ஏற்றும் மலை பாதையில் முழுக்க கற்கள் சேதமடைந்தும் பாறைகள் உடைந்தும் உள்ளது. இது ஒரு புறம் இருக்க… திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தை தரிசிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தற்போது பார்க்கலாம். மலையில் ஏற்றப்படும் தீபமானது சுற்றி 20 கி.மீ. தூரம் வரை தெரியும். இந்த தீபத்தை நேரில் பார்த்தால் 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும். திருவண்ணாமலை தீபத்தன்று மலையை பார்த்து ஓம் நவச்சிவாய என்ற மந்திரத்தை உச்சரித்தால் 3 கோடி முறை உச்சரித்த புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும்.

திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றும்போது, மலைக்கு உள் பகுதியிலும் பூஜைகள் நடக்கும் ஒலி கேட்டதாக ரமணர், சேஷாத்திரி சுவாமிகள் உள்பட பலர் கூறியுள்ளனர். திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்பட்டதும் தீபத்தை வணங்கிவிட்டு கிரிவலம் வந்தால் ஆன்மசக்தி அதிகரிக்கும். கார்த்திகை தீபத்தன்று கிரிவலம் வந்தால், எவ்வளவு பெரிய பாவம் செய்திருந்தாலும், முழுமையாக விமோசனம் கிடைக்கும். கார்த்திகை தீபத்தில் இருந்து 3ஆவது நாள் மலையை பஞ்ச மூர்த்திகளும் வலம் வருவார்கள் என சொல்லப்படுகிறது. அன்றைய தினம் நாமும் வலம் வந்தால் மிகப் பெரிய புண்ணியம் கிடைக்கும்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை காண சித்தர்கள் வருவார்கள் என்பது நம்பிக்கை. அப்படி வரும் சித்தர்கள் மலை உச்சியில் தீபம் ஏற்றும் கொப்பரை நெய்யில் சக்தி வாய்ந்த மூலிகைத் தைலங்களை சேர்த்து விடுவதால் அதில் இருந்து வரும் புகையானது தீய சக்திகளை அழிக்கும் திறன் கொண்டவையாம். நம் உடல் உபாதைகளையும் தீர்க்கும் வல்லமை கொண்டது. தீபத்தன்று கிரிவலம் செல்பவர்களுக்கு ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். மலையில் ஏற்றப்படும் இந்த தீபம் சுமார் 11 நாட்கள் வரை எரியும். இந்த நேரத்தில் எத்தனை காற்று, மழை வந்தாலும் தீபம் அணையாது. பஞ்ச பூத தலங்களில் நெருப்பு தலமாக உள்ளது இந்த திருவண்ணாமலை.

Read More : 6 மாதத்திற்கு ஒரு முறை செய்தால் போதும்..!! இயற்கை முறையில் குடல் முழுவதும் சுத்தமாகிவிடும்..!!

English Summary

Let’s now see what benefits you will get from visiting the Karthigai Deepam in Tiruvannamalai.

Chella

Next Post

60 வயதிலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? அப்ப இந்த 5 பழக்கங்களை கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க..

Sat Dec 7 , 2024
In this post, you can find tips to help you stay healthy even at the age of 60.

You May Like