fbpx

‘டைட்டானிக்’ பட நடிகர் புற்றுநோயால் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்…

டைட்டானிக், தி ஓமன் உள்ளிட்ட பிளாக்பஸ்டர் படங்களில் நடித்த ஹாலிவுட் நடிகர் டேவிட் வானர், புற்றுநோயால் காலமானார். அவருக்கு வயது 80.

70களின் நடுப்பகுதி முதல் 80 களின் நடுப்பகுதி வரை திரை வாழ்க்கையில் உச்சத்தில் இருந்த டேவிட் வார்னர், ‘The Omen’ என்ற படத்தின் மூலம் பிரபலமானார்.. பின்னர் 1978 ஆம் ஆண்டு ‘Holocaust’ என்ற குறுந்தொடரில் ரெய்ன்ஹார்ட் ஹெய்ட்ரிச் என்ற நாஜி அதிகாரியாக நடித்ததற்காக எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.1985 ஆம் ஆண்டு ‘Hitler’s S.S.: Portrait in Evil’.என்ற டெலிபிக் திரைப்படத்தில் அவர் நாஜி ஹெய்ட்ரிச் பாத்திரத்தில் மீண்டும் மீண்டும் நடித்தார்.

1997 ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூனின் பிளாக்பஸ்டர் படமான ‘டைட்டானிக்’ திரைப்படத்தின் டேவிட் வார்னர் வில்லனாக நடித்திருந்தார். 2001 ஆம் ஆண்டு ”Planet of the Apes’, ‘Ladies in Lavender’, ‘Mary Poppins Returns, ‘You, Me and Him’ உள்ளிட்ட பல படங்கஈல் அவர் நடித்துள்ளார்..

இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலமானார்.. அவரின் குடும்பத்தினர் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.. டேவிட் வார்னர் 18 மாதங்கள் உடல் நலம் சரியில்லாமல் இருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.. உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மற்றும் சக நடிகர்கள் டேவிட் வார்னரின் மறைவுக்கு சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Maha

Next Post

பள்ளிக்கு வராத மாணவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!

Tue Jul 26 , 2022
பள்ளி செல்லா குழந்தைகளைக் கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்க்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதிய உத்தரவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ”புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளையும் கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 4 வாரங்களுக்கு மேல் பள்ளிக்கு வராத மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் வகையில் செயல்படக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், EMIS இணையதளம், செயலி […]

You May Like