தமிழகத்தில் ஆவின் நிறுவனமானது ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதாவது, இன்று முதல் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டின் விலை அதிகரித்து இருக்கிறது. இதனால், டீக்கடைகளில் காஃபி மற்றும் டீ உள்ளிட்டவற்றின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறதாக தெரிகிறது.
தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்தின், பச்சை நிற பால் பாக்கெட் ஐந்து லிட்டர் 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 210 அதாவது ஒரு லிட்டர் 42 ரூபாய் என்ற கணக்கில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த சூழ்நிலையில் தான், பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் அதே விலையிலேயே, அதாவது, 44 ரூபாய் என்ற அளவில் வணிக நிறுவனத்திற்கும் விற்பனை செய்யும் நோக்கத்தில், பச்சை நிற 5 லிட்டர் ஆவின் பால் பாக்கெட்டின் விலை 10 ரூபாய் அதிகரிக்கப்பட்டு, வணிக நிறுவனத்திற்கும் 220 ரூபாய் என்ற கணக்கில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
இந்த விலை அதிகரிப்பு இன்று முதல் அமலுக்கு வந்திருக்கிறது. இந்த நிலை உயர்வு உணவக உரிமையாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு, உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் டீ மற்றும் காபி உள்ளிட்ட அவற்றின் நிலை ரூபாய் இரண்டு வரையில் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது