தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சென்ட்ரல் ரயில் நிலையம், முரசொலி மாறன் பூங்கா, அண்ணாநகர் டவர் பூங்கா, கோயம்பேடு பேருந்து நிலையம், மெரினா கடற்கரை, பாண்டிபஜார் சாலை, கத்திப்பாரா பூங்கா, பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, டைடல் பார்க் சந்திப்பு உள்ளிட்ட 100 இடங்களில், காலை 9.30 முதல் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் (மார்ச் 15) காலை 9.30 மணி முதல் வேளாண் பட்ஜெட் தாக்கலும் எல்இடி திரை வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதேபோன்று இதர 24 மாநகராட்சி பகுதிகளில் 48 இடங்கள், 137 நகராட்சி பகுதிகளில் 274 இடங்கள் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பேரூராட்சிகளில் 425 இடங்கள் என மொத்தம் 936 இடங்களில் இன்று பொது பட்ஜெட் நிகழ்வும், நாளை வேளாண் பட்ஜெட் நிகழ்வும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்த நிகழ்வில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் சரண் விடுப்பு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகளிர் உரிமை தொகையை உயர்த்துவதற்கான அறிவிப்பும், தொகையை உயர்த்துவதற்கான அறிவிப்பும் வெளியாகும் எனத் தெரிகிறது. பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய பட்ஜெட்டை தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
* ஆண்டு தோறும் ரூ1 கோடி பரிசுத் தொகைக்கான ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தப்படும்.
* பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் நடப்பாண்டு முதல் தமிழ் புத்த கண்காட்சி நடத்தப்படும். இதற்கு ரூ 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* நூல்களைப் பதிப்பாக்கம் செய்ய ரூ2 கோடி; ஓலைச்சுவடிகளை மின்பதிப்பாக்கம் செய்ய ரூ. 2 கோடி ஒதுக்கீடு.
* 45 பன்னாட்டு மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட உள்ளது; இந்த திட்டத்துக்கு ரூ133 லட்சம் ஒதுக்கீடு.சிவங்கை, தூத்துக்குடி, தென்காசி, நாகை, கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் அகழாய்வுக்காக ரூ7 கோடி நிதி ஒதுக்கப்படும்
* ஆண்டு தோறும் ரூ1 கோடி பரிசுத் தொகைக்கான ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தப்படும்.
* பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் நடப்பாண்டு முதல் தமிழ் புத்த கண்காட்சி நடத்தப்படும். இதற்கு ரூ 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* நூல்களைப் பதிப்பாக்கம் செய்ய ரூ2 கோடி; ஓலைச்சுவடிகளை மின்பதிப்பாக்கம் செய்ய ரூ. 2 கோடி ஒதுக்கீடு.
* 45 பன்னாட்டு மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட உள்ளது; இந்த திட்டத்துக்கு ரூ133 லட்சம் ஒதுக்கீடு.
* சிவங்கை, தூத்துக்குடி, தென்காசி, நாகை, கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் அகழாய்வுக்காக ரூ7 கோடி நிதி ஒதுக்கப்படும்.
* சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் சிந்துவெளி பண்பாட்டு அரங்கம் அமைக்கப்படும்.
* 8 லட்சம் கான்கிரீட் கலைஞர் கனவு இல்லங்கள் கட்டிடம் கட்டும் பணி நடைபெறுகிறது; கூடுதலாக ரூ3,500 கோடியில் 1 லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டப்படும்.
* ராமநாதபுரத்தில் ரூ21 கோடியில் நாவாய் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
* ஊரகம் மற்றும் ஊராட்சி துறைக்கு நடப்பாண்டில் ரூ29,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
* அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துக்கு ரூ1087 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
* சென்னை வேளச்சேரி, கொருக்குப் பேட்டையில் புதிய மேம்பாலங்கள் அமைக்கப்படும்
* சென்னை தாம்பரத்தில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை அமைக்கப்படும்