fbpx

Tn Budget 2025 : பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை.. பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு..

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வருகிறார்.

தமிழக பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள் இதோ :

போக்குவரத்து துறைக்கு ரூ.12,964 கோடி நிதி ஒதுக்கீடு.

500 கி.மீ தொலைவுள்ள வனப்பகுதி சாலைகள் ரூ.250 கோடியில் மேம்படுத்தப்படும்.

சென்னையில் 950, கோவையில் 75, மதுரையில் 100 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்.

கிண்டியில் ரூ.50 கோடியில் பன்முக போக்குவரத்து முனையம் அமைக்கப்படும்.

போக்குவரத்து துறையில் 3000 பேருந்துகள் கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கீடு.

கிண்டி, வண்ணாரப்பேட்டையில் தலா ரூ.50 கோடியில் பன்முக பேருந்து முனையம் அமைக்கப்படும்.

ஈரோடு, பர்கூர், கள்ளக்குறிச்சி, பழங்குடி மக்கள் மேம்பாட்டுக்கு ரூ. 10 கோடி ஒதுக்கீடு.

தொழிலாளர் திறன் மேம்பாட்டு துறைக்கு ரூ.1975 கோடி ஒதுக்கீடு.

ராமநாதபுரம் ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.

புதுக்கோட்டையில் 200 ஏக்கரில் தொழில் பூங்கா அமைக்கப்படும்.

சென்னைக்கு அருகே அதி நவீன உயிரி அறிவியல் பூங்கா அமைக்கப்படும்.

மதுரை, கடலூரில் காலணி தொழில்பூங்கா அமைக்கப்படும். இதன் மூலம் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

திருமுடிவாக்கம், சூரியூர் உள்ளிட்ட 9 பகுதிகளில் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். இதன் மூலம் 17,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

19000 கைவினை கலைஞர்களுக்கு ரூ.74 கோடி நிதி ஒதுக்கீடு.

விண்வெளி தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு.

மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 30 இடங்களில் முதல்வர் படைப்பகம் அமைக்கப்படும்.

ஐடி, டிஜிட்டல் சேவைக்கு ரூ.131 கோடி நிதி ஒதுக்கீடு.

சென்னை குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, திருப்போரூர் அருகே புதிய நீர்த்தேக்கம் கட்டப்படும்.

நீலகிரி, அரிட்டாப்பட்டி உள்ளிட்ட இடங்களில் வேட்டை பறவைகளின் வாழ்விடங்களை பாதுகாக்க, ரூ.1 கோடி ஒதுக்கப்படும்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் பல்லுயிர் பூங்கா நிறுவப்படும்.

பூந்தமல்லி, போரூர் மெட்ரோ ரயில் திட்டம் டிசம்பரில் செயல்பாட்டுக்கு வரும்.

பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும்.

Rupa

Next Post

மீனவ குடும்பங்களுக்கு உதவித் தொகை உயர்வு..!! மீட்க முடியாத விசைப்படகுகளுக்கு ரூ.8 லட்சம் நிவாரணம்..!! பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு..!!

Fri Mar 14 , 2025
Finance Minister Thangam Thennarasu presented the Tamil Nadu government's budget for 2025-26 in the Tamil Nadu Legislative Assembly today.

You May Like