2025-26-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வருகிறார்.
தமிழக பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்:
நகர்ப்புற டெலிவரி தொழிலாளர்கள் மின் வாகனம் வாங்க ரூ.20,000 மானியம் வழங்கப்படும்.
ரூ.500 கோடியில் செமி கண்டக்டர் இயக்கம் தொடங்கப்படும்.
நடமாடும் வாகனங்கள் மூலம் புற்றுநோய், இதய நோய் பரிசோதனை செய்ய ரூ.40 கோடி ஒதுக்கீடு.
ஓசூர், விருதுநகரில், டைடல் பூங்கா அமைக்கப்படும்.
ஓசூரில் அறிவுசார் தொழில்நுட்ப தடம் அமைக்கப்படும்.
கோவை, பல்லடத்தில் செமி கண்டக்டர் பூங்கா அமைக்கப்படும்.
திருச்சியில் 280 ஏக்கர் பரப்பளவில் வார்ப்பக பூங்கா அமைக்கப்படும்.
திசையன்விளை, காங்கேயம், மணப்பாறை உள்ளிட்ட 10 இடங்களில் புதிய அரசு தொழிற் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.
40 வயதுக்கு மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு முழு உடல் மருத்துவ பரிசோதனைக்கான அட்டை வழங்கப்படும்.
இணையம் சார்ந்த தொழிலாளர்களுக்கு குழு காப்பீட்டு திட்டம் உருவாக்கப்படும்.
கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து சிறுமிகளுக்கும் தடுப்பூசி வழங்க ரூ.36 கோடி ஒதுக்கீடு.
மருத்துவ துறைக்கு ரூ.21,976 கோடி ஒதுக்கீடு.
வளர்ந்து வரும் துறைகளில் புதிய பட்டப்படிப்புக்கள் உருவாக்கப்படும்.
அண்ணா பல்கலைக்கழகத்தை ஆசியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் பல உலக சாம்பியன்களை உருவாக்கும் வகையில், பள்ளி பாடத்தில் சதுரங்க விளையாட்டினை சேர்க்கும் விதமாக உடற்கல்வி பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும்.