fbpx

#TN GOVT: தமிழக அரசு ஊழியர்களுக்கு 10% தீபாவளி போனஸ் அறிவிப்பு.. யார் யாருக்கு முழு விவரம்..

தமிழக அரசு சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கு 10% போனஸ் அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டும் 10 சதவீத போனஸ் வழங்கப்பட்டு இருந்தது.

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டம் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களில் ரூ.7000 முதல் அதிகபட்சமாக 21,000 வரை ஊதியம் பெறும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 10 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 8.33 சதவீத போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகை உள்பட 10 சதவீத போனஸ் வழங்குவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக, தமிழக அரசு ரூ.216 கோடி ஒதுக்கீடு செய்து, 2 லட்சத்து 87 ஆயிரத்து 250 தொழிலாளர்களுக்கு இந்த போனஸ் தொகை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kathir

Next Post

இமாச்சல பிரதேசத்தில் நவ.12-ல் ஒரே கட்டமாக தேர்தல்.. குஜராத் தேர்தல் தேதி எப்போது?

Sat Oct 15 , 2022
மொத்தம் 68 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட இமாச்சலப் பிரதேசத்தில் சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 8ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சியில் இருக்கிறது. இங்கு பெரும்பான்மைக்கு 35 இடங்கள் தேவை, ஆனால் கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 44 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரசால் 21 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. தற்போது, இமாச்சலப் […]
election

You May Like