தமிழக அரசின் 2024 ஆம் வருடத்திற்கான சட்டப்பேரவை கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு தொடங்கிய இந்த கூட்டத் தொடரில் ஆளுநரின் நடவடிக்கையை கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கூட்டத்தொடர் தொடங்கிய சிறிது நேரத்திலேயே சட்டப்பேரவையில் இருந்து வெளியேறி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார்
இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் உரையை சபாநாயகர் வாசிக்க கூட்டத்தொடர் தொடங்கியது. இந்தக் கூட்டத் தொடரில் தமிழக அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் பொதுமக்களுக்காக அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது மேலும் ஒரு முக்கியமான அறிவிப்பையும் தமிழக அரசு பொது மக்களுக்கு அறிவித்திருக்கிறது . இந்தத் திட்டத்தின் மூலம் நிலுவையில் உள்ள வலிகளை செலுத்தினால் அவர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது
மக்கள் தங்களுக்கு நிலுவையில் உள்ள வரிகளை செலுத்துவதற்காக தமிழக அரசு சமாதான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் அடிப்படையில் தாமாக முன்வந்து நிலுவையில் உள்ள வரிகளை செலுத்துபவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. சமாதான திட்டத்திற்கான காலக்கெடு இன்றோடு முடிவடைந்த நிலையில் இந்தத் திட்டத்தை மேலும் 45 நாட்கள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த புதிய அவகாசத்தின்படி சமாதான திட்டத்தின் அடிப்படையில் மார்ச் 31ஆம் தேதி வரை நிலுவையில் உள்ள வரிகளை செலுத்தலாம் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மேலும் இந்தத் திட்டத்தின் மூலமாக தமிழக அரசு 10 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அபராதம் இல்லாமல் தங்களுடைய நிலுவையில் உள்ள வரிகளை செலுத்தி பொதுமக்கள் பயனடையுமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.