fbpx

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உறை பனி…! வானிலை மையம் தகவல்…!

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி‌ குறிப்பில்; இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும், உள்மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது. வரும் 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

Vignesh

Next Post

இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்...! மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு...!

Mon Jan 16 , 2023
ஒரிசா மாநிலம் கட்டாகில் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒடிசா மாநில அரசு கட்டாக் நகரில் அடுத்த இரண்டு நாட்களுக்கு 144 தடை விதித்தது. மகர மேளா பண்டிகையின் போது சிங்கநாத் கோயில் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலர் காயமடைந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சிங்கநாதர் கோயிலில் பக்தர்கள் நுழைவதற்கு நிர்வாகம் கட்டுப்பாடுகளை […]

You May Like