fbpx

தமிழகத்தில் இன்று வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்க கூடும்‌..! வானிலை மையம் எச்சரிக்கை…!

மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ இன்று ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஆகஸ்ட்‌ 1-ம்‌ தேதி முதல்‌ 5-ம்‌ தேதி வரை ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌கூடும்‌.

இன்று தமிழ்நாடு மற்றும்‌ புதுச்சேரியில்‌ ஓரிரு இடங்களில்‌ அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்‌ முதல்‌ 40 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்‌ கூடும்‌. ஓரிருஇடங்களில்‌ வெப்பநிலை இயல்பிலிருந்து 2 முதல்‌ 4 டிகிரி செல்சியஸ்‌ அதிகமாக இருக்கக்‌ கூடும்‌. அதிக வெப்பநிலை இருக்கும்போது வெப்ப அழுத்தம்‌ காரணமாக அசெளகரியம்‌ ஏற்படலாம்‌. எனவே, பொதுமக்கள்‌ வெயிலில்‌ செல்லும்போது எச்சரிக்கையுடன்‌ இருக்க வேண்டும்‌ என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

கேரள மாநிலத்தில் ஐந்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் என்னதான் நடந்தது……? காவல்துறை விசாரணையில் வெளியான பகிர் உண்மை…..!

Mon Jul 31 , 2023
கேரளாவின் அலுவா மாவட்டத்தில் சென்ற 4️ வருட காலமாக ஒரு தம்பதிகள் வசித்து வந்தனர். இந்த தம்பதிகளுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அந்த சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை மாலை திடீரென்று காணாமல் போயிருந்தார். இதனைத் தொடர்ந்து, பல்வேறு இடங்களில் பெற்றோர்கள் அந்த குழந்தையை தேடி பார்த்தும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில், காவல்துறையினர் புகார் வழங்கினர். இதனை தொடர்ந்து […]

You May Like