fbpx

Tn Rain: 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று…! மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை…!

மீனவர்கள் வரும் 22-ம் தேதி வரை கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு பகுதிகளின் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்குச்சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அதேபோல நாளை தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

ஆந்திர கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், மத்தியமேற்கு வங்க கடல் மற்றும் வட ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் இப்பகுதி மீனவர்கள் 22-ம் தேதி வரை மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

அடுத்த ஷாக்... இனி UPI, Paytm, Google Pay போன்ற பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்...? ஆர்பிஐ அதிரடி...

Fri Aug 19 , 2022
நாடு முழுவதும் விரைவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் வசூலிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி பணம் செலுத்தும் முறைகளில் உள்ள கட்டணங்கள் குறித்து பங்குதாரர்களிடமிருந்து கருத்துக்களைக் கோரியுள்ளது. மத்திய வங்கி அதன் பெரிய முதலீடு மற்றும் கட்டண முறைகளில் செயல்பாட்டு செலவினங்களை மீட்டெடுப்பது, பரிமாற்றத்தை ஒழுங்குபடுத்துதல் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு ஒரு பரிவர்த்தனை கட்டணத்தை கட்டாயப்படுத்துதல் மற்றும் யுபிஐ அடிப்படையிலான நிதி பரிமாற்ற பரிவர்த்தனைகளில் […]

You May Like