fbpx

TN Rain | இன்று 14 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”இன்று (ஆகஸ்ட் 12) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. மேலும் புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், கடலூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, நாளை (ஆகஸ்ட் 13) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் ஆகஸ்ட் 14 முதல் 18 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Chella

Next Post

Nanguneri | ’எங்கள் குடும்பத்தை காப்பாற்றுங்கள்’..!! ’இந்த ஊரில் எங்களால் வாழ முடியாது’..!! மாணவனின் தாய் கண்ணீர் மல்க பேட்டி..!!

Sat Aug 12 , 2023
நெல்லை மாவட்டம் நாங்குநேரி (Nanguneri) அருகே பெருந்தெருவைச் சேர்ந்த அம்பிகா – முனியாண்டி தம்பதியின் மகன் சின்னதுரை. இவர், வள்ளியூரில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்நிலையில், குறிப்பிட்ட பிரிவு மாணவர்கள் சின்னதுரையிடம் தங்களது புத்தகப் பைகளை சுமக்க வைப்பதும், கையில் காசு வைத்திருந்தால் பிடுங்கிக் கொள்வதும், தாங்கள் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டும் என்ற நிலையில் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து நடந்த சாதிய ஒடுக்குமுறையால் […]

You May Like