தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்த நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ரெக்கார்ட் கிளர்க் அசிஸ்டன்ட் மற்றும் செக்யூரிட்டி பணிக்கான வேலைகளில் 160 காலியிடங்கள் உள்ளன அவற்றை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பிற்கு தகுதியும் திறமையுமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த வேலை வாய்ப்புகளில் ரெக்கார்டு கிளர்க் பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு இளங்கலையில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். செக்யூரிட்டி பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பில் சேருவதற்கு குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆகவும் உச்ச பட்ச வயது வரம்பு 37 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பில் தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு ஊதியமாக ரூ.8,784/- வரை வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை வாய்ப்பிற்கே விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 03.05.2023 ஆகும். இந்த வேலை வாய்ப்பிற்கு விருப்பமும் தகுதியுமுடைய நபர்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் ராணிப்பேட்டையில் பணியமர்த்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிற தகவல்களை அறிய tncsc.tn.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.