தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நூலகப் பிரிவில் காலியாக உள்ள 35 இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி நூலகப் பணிகளுக்கான விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடமிருந்து வரவேற்கப்படுவதாக அறிவித்திருக்கிறது. இந்த விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 01.03.2023. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக கல்லூரி நூலகர் மற்றும் தகவல் அலுவலர், மாவட்ட நூலக அலுவலர், நூலக உதவியாளர், நூலகர் மற்றும் தகவல் உதவியாளர் ஆகிய பதவிகளில் 35 காலியிடங்கள் உள்ளன. அவற்றிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்தப்பணிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் மார்ச் 1ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிறவி விவரங்களை இந்தப் பணிகளில் சேர்வதற்கு கல்வி தகுதியாக நூலகர் மற்றும் தகவல் உதவியாளர் பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மற்ற பணிகளுக்கு நூலக அறிவியல் பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருப்பது அவசியமாகும். கல்லூரி நூலகர் பணிகளுக்கு உச்சபட்ச வயது வரம்பு 59. இதில் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு வயதுவரம்பு தடை இல்லை. நூலகர் மற்றும் தகவல் உதவியாளர் பணிகளுக்கு உச்ச பட்ச வயது வரம்பு 37 ஆகும். மாவட்ட நூலக அதிகாரி பணிகளுக்கும் உச்சபட்ச வயது வரம்பு 37. நூலக உதவியாளர் பணிகளுக்கு உச்சபட்ச வயது வரம்பு 32 மற்றும் நூலகர் மற்றும் தகவல் உதவியாளர் பணிகளுக்கும் உச்சபட்ச வயது வரம்பு 32 ஆகும். இந்த அனைத்து பணிகளுக்கும் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் விதவைகள் மற்றும் அரசாங்கத்தால் சலுகை அளிக்க பட்டவர்களுக்கு வயது ஒரு தடை இல்லை.
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான பதிவுத்தொகை 150 ரூபாய் மற்றும் தேர்வு கட்டணம் 200 ரூபாய். இந்த இரண்டு கட்டணத்தையும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது இணையதள கட்டணம் செலுத்தும் சேவை வழியாக செலுத்த வேண்டும். எஸ் சி மற்றும் எஸ் டி பிரிவினருக்கு கட்டணங்கள் எதுவும் இல்லை. கல்லூரி நூலகர் பணிகளுக்கு சம்பளமாக 57,700- 2,11,500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நூலகர் மற்றும் தகவல் அலுவலர் பணிகளுக்கு சம்பளமாக 56,100 – 2,05,700 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நூலக உதவியாளர் பணிகளுக்கு சம்பளமாக 35,400 – 1,30,400 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நூலகர் மற்றும் தகவல் உதவியாளர் பணிகளுக்கு சம்பளமாக 19,500 – 71,900 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் விதிகளின்படி தேர்வு ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் நேர்காணலின் மூலம் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய தகவல்களை அறிய :tnsc.gov.in என்ற இணைய முகவரியில் சென்று தகவல்களை சரி பார்த்துக் கொள்ளவும்.