fbpx

புதுக்கோட்டையில் ப்ளூடூத் பயன்படுத்தி டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதிய மாணவர் அதிரடி கைது……! உதவி செய்தவரும் விரைவில் கைது செய்யப்படுவார் காவல் துறை நடவடிக்கை…..!

புதுக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரியில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வை 666 பேர் எழுதினர். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள குளத்துறை சேர்ந்த தர்மர் (20) என்ற நபர் பட்டன் கேமரா மற்றும் ப்ளூடூத் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து, அவர் தேர்வு எழுதுவதற்கு தடை விதிக்கப்பட்டதுடன் இந்த விவகாரம் குறித்து புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் வழங்கப்பட்டது.

ஆகவே தர்மரை காவல்துறையினர் பிடித்து வந்து விசாரணை மேற்கொண்டனர்
அப்போது அவருக்கு ஈரோட்டில் இருந்து பரணிதரன் (20 )என்பவர் உதவி புரிந்தார் என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து தர்மரை காவல்துறையினர் கைது செய்தனர் பாரணிதரன் விரைவில் கைது செய்யப்படுவார் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

உயரப் போகும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை…..! புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திரமோடி பேச்சு…..!

Sun May 28 , 2023
இன்று நாட்டின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார் மேலும் சோழர்கால செங்கோல் என்று குறிப்பிடப்படும் செங்கோலை நாடாளுமன்றத்தில் மைய வளாகத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே அதற்கென்று பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இடத்தில் வைத்தார் நரேந்திரமோடி. இதன் பிறகு புதிய நாடாளுமன்றத்தில் இன்று சிறப்புரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி செங்கோல் தற்போது தான் சரியான இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது செங்கோலை வழங்கிய தமிழகத்தின் ஆதீனங்களுக்கு நன்றி எதிர்காலத்தில் நாடாளுமன்ற […]

You May Like