fbpx

கவனம்…! TNPSC தேர்வு தேதியில் மாற்றம்… தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு…! மீண்டும் எப்பொழுது…?

சிவில் நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நீதித்துறை பணிகளில் அடங்கிய சிவில் நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டது. இதில் மொத்தம் 245 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணிக்கு ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதற்கான தேர்வுகள் அக்டோபர் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பில் நவம்பர் 4, 5 தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முதல் நிலைத் தேர்வில் சட்டம் சார்ந்து 100 வினாக்கள் 100 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.முதன்மைத் தேர்வு 4 தாள்களாக நடைபெறும். முதல் தாள் மொழிப்பெயர்ப்பு தேர்வு. அடுத்த மூன்று தாள்களும் சட்டம் சார்ந்த பாடங்கள் இடம்பெற்றிருக்கும். இந்த தேவை எழுதுவதற்காக கால அவகாசம் 3 மணி நேரம் ஆகும்.

Vignesh

Next Post

தீபாவளிக்கு தயாரான ஆவின் இனிப்புகள்..!! அக்.10 முதல் விற்பனை..!! விலை எவ்வளவு தெரியுமா..?

Sat Oct 7 , 2023
ஆவின் நிறுவனம் பால் மட்டுமின்றி வெண்ணெய், நெய், பால்கோவா, மைசூர் பாகு, குலாப்ஜாமுன், ரசகுல்லா, லஸ்ஸி, ஐஸ் கிரீம் உள்ளிட்ட பல பால் பொருட்களை தயார் செய்து வருகிறது. இது, ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் பொதுமக்களிடம் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கடந்தாண்டு ஆவின் இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்பட்டது. அதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், இந்தாண்டு தீபாவளிக்கும் கீழ்க்கண்ட […]

You May Like