fbpx

டிஎன்பிஎஸ்சி 2025ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு..!! குரூப் 1, குரூப் 2 தேர்வுகள் எப்போது..?

அடுத்தாண்டுக்கான (2025) வருடாந்திர தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி இன்று (அக்.10) வெளியிட்டுள்ளது. அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் www.tnpsc.gov.in விவரம் இடம்பெற்றுள்ளது. எந்தெந்த பதவிகளுக்கு எப்போது தேர்வு நடத்தப்படும் என்பது குறித்த விவரங்கள் அடங்கிய தேர்வு அட்டவணையை ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், அடுத்த ஆண்டுக்கான (2025) வருடாந்திர தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் www.tnpsc.gov.in இன்று (அக்.10) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி, குருப்-1 தேர்வு, குருப்-4, தேர்வு ஒருங்கிணைந்த குருப்-2 மற்றும் 2-ஏ தேர்வு, ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான தேர்வு உள்பட மொத்தம் 7 தேர்வுகள் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியிடப்படும், எப்போது தேர்வு நடத்தப்படும் என்ற விவரங்களை தேர்வர்களே அறிந்துகொள்ளலாம். காலிப்பணியிடங்களின் விவரம் தேர்வுக்கான அறிவிப்பின்போது தெரிவிக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.

Read More : உடலுறவு வைத்துக் கொள்ளும்போது இதை அனுபவிச்சிருக்கீங்களா..? அப்படினா இது உங்களுக்குத்தான்..!!

English Summary

TNPSC has released the annual exam schedule for next year (2025) today (Oct 10).

Chella

Next Post

ரத்தன் டாடாவின் ஆரோக்கியத்திற்கான அர்ப்பணிப்பு..!! டாடா சால்ட் தோற்றத்தின் நோக்கம் என்ன?

Thu Oct 10 , 2024
Ratan Tata's commitment to health: How Tata Salt became a staple in every Indian kitchen

You May Like