fbpx

டிஎன்பிஎஸ்சி தேர்வு..! வயது வரம்பை உயர்த்த தமிழக அரசு ஆணையிட வேண்டும்..! ராமதாஸ் கோரிக்கை

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வின் அதிகபட்ச வயதை 40ஆக உயர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”டிஎன்பிஎஸ்சி நடத்தும் மாவட்ட துணை ஆட்சியர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்கான வயது வரம்பை உயர்த்தப்பட வேண்டும் என்ற தேர்வர்களின் கோரிக்கை மீண்டும் நிராகரிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. முதல் தொகுதி தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். தமிழக அரசும் அதையேற்று 2018ஆம் ஆண்டில் 2 ஆண்டுகளும், 2021ஆம் ஆண்டில் இரு ஆண்டுகளும் வயது வரம்பை உயர்த்தியுள்ளது. ஆனால், உயர்த்தப்பட்ட வயது வரம்புக்கும், தேர்வர்கள் கோரும் வயது வரம்புக்கும் இடையிலான வித்தியாசம் மலைக்கும், மடுவுக்கும் இடையிலானது ஆகும்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு..! வயது வரம்பை உயர்த்த தமிழக அரசு ஆணையிட வேண்டும்..! ராமதாஸ் கோரிக்கை

இந்தியாவில் 11 மாநிலங்களில் குரூப் 1 தேர்வுகளில் பங்கேற்பதற்கான வயது வரம்பு தமிழகத்தை விட அதிகமாகும். தமிழகத்தில் மட்டும் வயது வரம்பை உயர்த்த டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தொடர்ந்து மறுத்து வருவது அநீதி. சமூக நீதியில் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழகம் திகழ்கிறது. அது முதல் தொகுதி தேர்வுக்கான வயது வரம்பிலும் எதிரொலிக்க வேண்டும். மாறாக, வயது வரம்பை கடைபிடிப்பதில் உறுதியைக் காட்டி, தேர்வர்களுக்கு வாய்ப்புகளை மறுக்கக் கூடாது. இதை உணர்ந்து தமிழ்நாட்டில் முதல் தொகுதி தேர்வுகளை எழுதுவதற்கான வயது வரம்பை பொதுப்பிரிவினருக்கு 40 ஆகவும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45 ஆகவும் உயர்த்த தமிழக அரசு உடனடியாக ஆணையிட வேண்டும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

கனியாமூர் பள்ளி வன்முறையில் ஆவணங்களை தீயிட்டு கொளுத்திய நபர் கைது..! வீடியோவில் சிக்கியதால் நடவடிக்கை..!

Fri Aug 12 , 2022
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் கலவரத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவின் ஆதாரத்தின் அடிப்படையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் பயின்ற ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் இறந்த சம்பவமும் அந்த இறப்பு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததும் தமிழ்நாட்டையே உலுக்கியது. மாணவி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. […]
கனியாமூர் பள்ளி வன்முறையில் ஆவணங்களை தீயிட்டு கொளுத்திய நபர் கைது..! வீடியோவில் சிக்கியதால் நடவடிக்கை..!

You May Like