fbpx

டிஎன்பிஎஸ்சி குருப்-1 தேர்வு… சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு…! முழு விவரம்

குருப்-1 தேர்வில் சில தேர்வர்கள், தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாமல் இருப்பதும், சிலவற்றை முழுமையாக பதிவேற்றம் செய்யாமல் விட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அத்தகைய தேர்வர்கள் உரிய சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; குருப்-1 தேர்வில் சில தேர்வர்கள், தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாமல்இருப்பதும், சிலவற்றை முழுமையாக பதிவேற்றம் செய்யாமல் விட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அத்தகைய தேர்வர்கள் உரிய சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய கடைசி வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

அவர்கள் நவம்பர் 2-ம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்குள் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதுகுறித்து அவர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாவிட்டால் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

TNPSC Group-1 Exam… Extension of Time to Upload Certificates

Vignesh

Next Post

நீங்கள் வைக்காமலேயே வீட்டில் துளசி செடி வளர்ந்துவிட்டதா? அதற்கு என்ன அர்த்தம்..

Tue Oct 22 , 2024
Have a basil plant suddenly grown at home without you keeping it? What does that mean..

You May Like