தமிழ்நாடு அரசின் பணிகளுக்கு TNPSC மூலமாக தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறும் நபர்கள் பணியமரத்தப்படுவார்கள். டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்றை தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வாணையம் வெளியிட்டு இருக்கிறது.
குரூப் 2 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரித்து TNPSC புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இதற்கு முன்பு 5,413 ஆக இருந்த பணியிடங்கள் தற்போது 6151 ஆக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. 738 இடங்கள் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பால் குரூப் 2 தேர்வு எழுதியவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
குரூப் 2 பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வுகள் 2022 ஆம் ஆண்டு மே மாதம் மாதம் நடைபெற்றது. ஒன்பது லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வுக்கான முடிவுகள் 2022 ஆம் வருடம் நவம்பர் மாதம் வெளியாகியது. இதில் தேர்ச்சி பெற்ற 51 ஆயிரம் பேர் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் முதன்மை தேர்வு எழுதினார். இதற்கான முடிவுகள் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி 738 பணியிடங்களை அதிகரித்திருப்பது தேர்வர்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.