டிஎன்பிஎஸ்சியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பணியின் முழு விவரம்…
நிறுவனம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service commission)
பணிகள்: வேளாண்மை அலுவலர், வேளாண்மை உதவி இயக்குநர், தோட்டக்கலை அலுவலர்
காலியிடங்கள்: 93
வயது வரம்பு:
1.07.2023 அன்று, 32 வயதினை பூர்த்தி அடைந்திருக்கக் கூடாது. வேளாண்மை பாடத்தில் பட்ட மேற்படிப்பு அல்லது முனைவோர் பட்டம் பெற்றவர்கள் 34 வயதிற்கு மேல் இருக்கக் கூடாது. மேலும் ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியினர், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதரவற்ற விதவைகள் பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது.
கல்வித்தகுதி:
* வேளாண்மை அலுவலர் – வேளாண்மை துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
* வேளாண்மை உதவி இயக்குநர் – வேளாண்மை விரிவாக்க படிப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
* தோட்டக்கலை அலுவலர் – தோட்டக்கலை துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
www.tnpsc.gov.in/ மற்றும் www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணையவழி விண்ணப்பத்தை 10.02.2023 அன்று இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்க முடியும். பின்னர் அச்சேவை நிறுத்தப்படும்.
தேர்வு நாள்: 20.5.2023 மற்றும் 21.05.2023