ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தேர்வில் (நேர்காணல் இல்லாதது) மின்சார வாரிய உதவி பொறியாளர் பதவியில் 250 காலியிடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. தற்பொழுது, ஒட்டுமொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 1,235 ஆக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; “தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டுக்கழக உதவி மேலாளர் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 15-லிருந்து 14 ஆக மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், அக்கழக உதவி பொறியாளர் (சிவில்) பதவியில் உள்ள பணியிடங்கள் 19-லிருந்து பூஜ்ஜியமாக்கப்பட்டுள்ளன.
மேலும், தமிழ்நாடு மின் பகிர்மான கழக (மின்சார வாரியம்) உதவி பொறியாளர் எலெக்ட்ரிக்கல் பிரிவில் 195 இடங்களும், சிவில் பிரிவில் 30 இடங்களும், மெக்கானிக்கல் பிரிவில் 25 இடங்களும் (மொத்தம் 250 தற்போது புதிதாக சேர்க்கப்படுகின்றன. இதைத்தொடர்ந்து ஒட்டுமொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 1,235 ஆக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு பதவிக்கும் இடஒதுக்கீடு வாரியான காலியிடங்கள், வயது வரம்பு போன்ற விவரங்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.