இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் நிலை 3 தேர்வுக்கான Hall Ticket இனையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் கிரண்குராலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; செப்டம்பர் 10-ம் தேதி காலை மற்றும் மாலையில் நடைபெறவுள்ள குரூப் 7-பி தேர்வுகளில் அடங்கிய செயல் அலுவலர், நிலை-3 (இந்து சமய அறநிலைய சார்நிலைப் பணிகள்) பதவிக்கான எழுத்துத் தேர்வு (கொள் குறிவகை) நடைபெற உள்ளது. இந்தத் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.