fbpx

அரசு ஊழியர்கள் அனைவருக்கும்..! பதவி உயர்வு..! தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு..!

அரசு ஊழியர்கள் அனைவருக்கும் உரிய காலத்தில் முறையான பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தகுதியுள்ள அரசு அலுவலர்கள் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெறுவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். ஓய்வுபெறும் நாளன்று செயற்கை காலியிடங்களை ஏற்படுத்தி பதவி உயர்வு மேற்கொள்ளப்படுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே, பதவி உயர்வை பெற்று முழு சேவை செய்யாமலேயே பணப் பலன்களை சிலர் பெற்று வருவதாகவும் குற்றச்சாட்டுகள் அரசிடம் வைக்கப்பட்டுள்ளன.

அரசு ஊழியர்கள் அனைவருக்கும்..! பதவி உயர்வு..! தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு..!
இறையன்பு – தலைமைச் செயலாளர்

இதனால், செயற்கை காலிப்பணியிடங்களை ஏற்படுத்துதலை தவிர்க்க வேண்டும் என்றும் தற்காலிக பதவி உயர்வு வழங்குதல் ஆகியவற்றை தவிர்க்குமாறு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான உத்தரவு அனைத்து துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

வெளுத்து வாங்கும் கனமழை.. கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..

Fri Aug 5 , 2022
கேரளாவின் 8 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.. கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு மற்றும் கண்ணூர் ஆகிய இடங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது, திருவனந்தபுரம் தவிர மற்ற மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஏராளமானோர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். […]

You May Like