தமிழகத்தில் மாணவர்களின் பல் பாதுகாப்பு தொடர்பாக புதிய திட்டம் ஒன்றை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது. தமிழக சுகாதாரத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்டவை இணைந்து செயல்படுத்தும் புன்னகை எனும் பள்ளி சிறார்களின் பல் பாதுகாப்பு திட்டம் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆரம்பமானது.
தற்சமயம் இந்த திட்டம் சென்னையில் இருக்கின்ற பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்ற சூழ்நிலையில், தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இந்த புன்னகை திட்டம் விரிவு படுத்தப்பட இருக்கிறது.
ஆகவே இந்த திட்டம் சார்ந்து சுகாதார துறையின் மாவட்ட அலுவலர்கள் அணுகும்போது சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அந்தந்த மாவட்ட ஆட்சியருடன் பங்கேற்றுக் கொண்டு, ஆலோசனை நடத்தி இந்த திட்டம் சார்ந்த பணிகளை ஒருங்கிணைத்து முன்னெடுக்க வேண்டும். அதே நேரம் இந்த பணிகளின் போது அரசு சார்பாக வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.