fbpx

தமிழகமே…! அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் விநியோகம்…! தலைமைச் செயலாளர் அதிரடி…!

அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதிப்படுத்தவும் தொடர்ந்து கண்காணிக்கவும் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர்களைத் தலைமைச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ; அண்மையில் தண்ணீர் மாசுபாடு தொடர்பாக தமிழ்நாட்டில் நடைபெற்ற ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்தைச் சுட்டிக்காட்டவும் இத்தகைய சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தவும் விரும்புகிறேன். அசுத்தமான நீரை அருந்திய பலர் உடல்நிலை பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஒருவர் உயிரிழக்கவும் நேரிட்டது.

கடந்த ஆண்டு ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 60 சதவீதம் வீடுகளுக்குக் குடிநீர் இணைப்புக் குழாய்களை (FHTC) அமைத்து, இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு சிறப்பாகச் செயல்பட்டது என இந்திய அரசு அங்கீகரித்துள்ளது. இத்தகைய வகையில் சிறந்து விளங்கிய நம் மாநிலத்தில், மாசுபாடான நீரை அருந்தியதால் குடிமக்கள் பாதிக்கப்படுவது தொடர்பான செய்திகள் வருவது வருந்தத்தக்கது. இத்தகைய சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இது தொடர்பாக குடிநீர் விநியோகம் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களைத் தலைமைச் செயலர் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறைகளைத் தீர்க்கும் அமைப்பு:

குடிநீரின் தரம் தொடர்பான பிரச்சினைகளை உடனுக்குடன் களையும்வகையில் ஒரு வலுவான குறை தீர்க்கும் அமைப்பை நிறுவுதல் வேண்டும். குடிநீர் பிரச்சினை தொடர்பாக புகாரளித்தால் அவை சரியான நேரத்தில் தீர்க்கப்படுகிறது என்ற நம்பிக்கை குடிமக்களுக்கு ஏற்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த குறிப்பிட்ட விரிவான நடவடிக்கைகள் அனைத்தையும் 30.09.2023 க்கு முன் நிறைவேற்றி முடிக்க வேண்டும். மேலும், இது தொடர்பான முன்னேற்றத்தையும் ஆக்கபூர்வமான விளைவுகளையும் கண்காணிக்க ஏதுவாக. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலருக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் முதன்மைச் செயலாளருக்கும் விரிவான அறிக்கையை அளிக்க வேண்டும்.

நமது குடிமக்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது:

சுத்தமானதும் பாதுகாப்பானதுமான குடிநீரைப் பெறுவது அவர்களது அடிப்படை உரிமையாகும். இப்பிரச்சினையைத் தீர்ப்பதில் உங்களின் முன்முயற்சியான நடவடிக்கைகள் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதுடன், அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீரை வழங்குவதற்கான நாம் எத்தகைய உறுதிப்பாட்டுடன் செயல்படுகிறோம் என்பதையும் தெளிவுபடுத்தும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

தொடர் பதற்றம்...! சந்திரபாபு நாயுடுவிடம் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை...! 144 தடை உத்தரவு அமல்...

Sun Sep 10 , 2023
விஜயவாடா மங்களகிரியில் உள்ள சிஐடி அலுவலகத்தில் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிடம் தொடர்ந்து 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தது. கடந்த 2014-17ம் ஆண்டு வரையிலான சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக் காலத்தில், திறன் மேம்பாட்டு கழகத்தில் ரூ.317 கோடி ஊழல் நடந்ததாக கடந்த நாலரை ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட வழக்கில், நேற்று அதிகாலை நந்தியாலாவில் முன்னாள் ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித்தலைவரும், தற்போதைய ஆந்திர […]

You May Like