fbpx

கண் திருஷ்டியால் ஏற்பட்ட தோஷம் நீங்க… இந்த பரிகாரம் ஒன்றே போதும்.!

மக்களாய் பிறந்த ஒவ்வொருவரும் ஒன்றாக உழைத்து பணம் சம்பாதித்து உடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வதையே விரும்புவோம். சிலருக்கு என்னதான் வாழ்வில் கஷ்டப்பட்டு உழைத்து பொருள் சேர்த்தாலும் அவர்கள் சேர்த்த செல்வம் எதுவும் வீட்டில் தாங்காது. அதற்கு மற்றவர்களின் கண் திருஷ்டி காரணமாக இருக்கும். சொல்லடி பட்டாலும் கண் அடி படக்கூடாது என்று சொல்வார்கள் ஏனெனில் கண் திருஷ்டி அவ்வளவு தீமைகள் கொண்டது.

என்னதான் நம்மை சுற்றி நல்லவர்கள் இருந்தாலும் கெட்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களது கண் திருஷ்டி நம் மீதோ நம் வீட்டின் மீது விழும்போது அது எதிர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்கிறது. கண் திருஷ்டியால் ஒருவரது வீட்டில் செல்வம் தங்காது. எங்களது வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் சூழ்ந்திருக்கும். இது போன்ற கண் திருஷ்டியில் இருந்து ஒருவரது வீட்டையும் நாட்டின் செல்வ வளங்களையும் காத்துக் கொள்ள சிறிய பரிகாரம் ஒன்று இருக்கிறது.

தீபாவளிக்கு மறுநாள் ஐப்பசி அமாவாசை இதற்கு சிறந்த நாள் ஆகும். இந்த நாளில் சிவப்பு மூட்டையை வீட்டின் தலைவாசலில் கட்டி தொங்கவிடுவதன் மூலம் கண் திருஷ்டி நீங்குவதோடு வீட்டில் செல்வம் வளமும் நேர்மறை எண்ணங்களும் பெருகும். இதற்கு ஒரு சிவப்பு துணி எடுத்து அதில் நவதானியங்கள் சோழி, சுடுகாய் மற்றும் வசம்பு ஆகியவற்றை சேர்த்து மூட்டையாக கட்டி குலதெய்வத்தை மனதில் நினைத்துக் கொண்டு வீட்டின் தலைவாசலில் இந்த சிவப்பு மூட்டையை கட்டி தொங்க விட வேண்டும்.

இது மற்றவர்களின் கண்களால் ஏற்படும் கண் திருஷ்டியை போக்குவதோடு அவர்களது கண் திருஷ்டியால் வீட்டில் நிறைந்து இருக்கும் எதிர்மறை எண்ணங்களை நீக்கி வீட்டில் செல்வ வளமும் நேர்மறை எண்ணங்களும் நிறைந்திருக்க உதவி புரிகிறது. வீட்டில் உள்ளவர்களின் வாழ்வு மேம்பட்டு பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படவும் அருள் புரிகிறது.

Next Post

சிறுநீரகங்களின் நச்சுத்தன்மையை வெளியேற்றனுமா.? அப்போ இந்த மூலிகை வகைகள் பற்றி தெரிஞ்சிக்கங்க.!

Thu Nov 23 , 2023
சிறுநீரகம் மனித உடலின் இன்றியமையாத உறுப்புக்களில் ஒன்றாகும். இதுதான் நம் உடலின் நச்சுப் பொருட்களை வெளியேற்றுவதில் முக்கிய பங்காற்றுகிறது. சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டால் நச்சுப் பொருள்கள்ள உடலில் தேங்கி பல்வேறு விதமான நோய்களையும் ஏற்படுத்தும். இதனால் நமது சிறுநீரகத்தின் நச்சுப் பொருட்களை ஆயுர்வேத முறையில் வெளியேற்றும் மூலிகை ஒன்றிணை பற்றி இந்த பதிவில் காண்போம். சிறுநீரகத்தில் இருக்கக்கூடிய நச்சுப் பொருட்களை நீக்குவதற்கு உதவும் மூலிகை சீமை காட்டு முள்ளங்கியின் வேர்கள் […]

You May Like