குஜராத்தில் உள்ள மருத்துவக் கல்லுாரிக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்படுவதாக, நேற்று நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில், பாரதிய ஜனதா கட்சி, ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, அகமதாபாத்தில் மாநகராட்சிக்குச் சொந்தமான மருத்துவமனை ஒன்று உள்ளது. இதன் வளாகத்தில், ஒரு மருத்துவக் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அகமதாபாத் மாநகராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், அதன் தலைவர் ஹிதேஷ் பரோத், மாநகராட்சி மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் மருத்துவக் கல்லுாரிக்கு, பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்படும், என அறிவித்தார். மேலும் கடந்த வருடம், அகமதாபாத்தில் கட்டப்பட்ட பிரமாண்டமான கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு, பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டதை தொடர்ந்து, தற்போது மருத்துவக் கல்லுாரிக்கும் அவரது பெயர் சூட்டப்பட இருக்கிறது.