சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இந்த 5 உணவு பொருட்களை தவறாமல் தொடர்ந்து கடைபிடித்துவருவதன் மூலம் உடலில் இருக்கும் சர்க்கரை அளவு வெகுவாக குறைக்கலாம். அது என்னென்ன பொருட்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சர்க்கரை நோய்க்கு உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகள் மூலம் அதன் அளவை வெகு சுலபமாககுறைக்க முடியும். உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வருவதும் அதே நேரத்தில் உணவு பழக்கங்களில் சிறு மாற்றம் செய்தாலே போதும் ஒரு நல்ல மாற்றத்தை காணலாம். பொதுவாக உணவு பழக்கங்களை முறையாக எடுத்துக்கொண்டு வந்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். அந்தவகையில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் சில உணவுப்பொருட்களை இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம். வெல்லத்தில் மக்னீசியம், இரும்பு, பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால் நீரிழிவு நோயாளிகள் இதனை தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம். சிலர் வெல்லத்தை தனியாகசாப்பிடுவார்கள் அப்படி சாப்பிடாமல் சிறிது இஞ்சி, ஏலக்காய் போன்றவை சேர்த்தும் எடுத்துக் கொள்ளலாம்.
பேரீட்சை பழம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று என்றாலும், இதனை வெள்ளை சீனிக்கு பதிலாக நாம்பயன்படுத்தலாம். இதில் அதிக கலோரிகள் உள்ளது என்றாலும் நார்சத்து, ஆன்டி ஆக்ஸிடண்ட், மெக்னிஷியம், பொட்டாஷியம், வைட்டமின் பி6 போன்றவை நிறைந்து காணப்படுகிறது. இதனை நாம் பேஸ்ட் போன்று செய்து பாலில் சேர்த்து பருகி வரலாம். மேலும் இதர பானங்களிலும் சேர்த்து சுவைக்கலாம். இதிலுள்ள இனிப்பு சுவை சர்க்கரை நோயாளிகளை பெரிய அளவில் பாதிக்காது. இதனைஅளவோடு சாப்பிட்டு வர நிச்சயமாக ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த இனிப்பு துளசியின் பொடியை டீ, காபி போன்ற பானங்களில் சேர்த்து எடுத்துக் கொண்டால் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். மேலும் பிஸ்கட், பாயாசம் மற்றும் பழச்சாறு போன்றவற்றிலும் சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தலாம்.இதனை பயன்படுத்துவதால் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது.
கருப்பட்டியில் கால்சியம் மற்றும்இரும்பு சத்து நிறைந்து காணப்படுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க துணை புரிகிறது. மேலும் இதில் விட்டமின்-பி, அமினோ அமிலங்கள் போன்றவை இருப்பதால் கருப்பட்டி சர்க்கரை நோயைகட்டுப்படுத்த உதுவுகிறது. மேலும் கருப்பட்டியில் பற்பல விட்டமின்களும், மினரல் சத்துக்களும் அதிகமாக உள்ளன. இதில் இருக்கும் ‘கிளைசீமி இன்டெக்ஸ்’ உடலில் உள்ள சர்க்கரை அளவை, வெகு விரைவாக குறைக்கிறது.