fbpx

அடுத்த செக்…! மாதம் தோறும் உதவித் தொகை பெற ஆதார் எண் கட்டாயம்…! தமிழக அரசு அதிரடி உத்தரவு…! முழு விவரம்…

மாற்றுத்திறனாளிகள், தங்களது ஆதார் எண்ணுடன் கூடிய சுயவிவரங்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகையாக மாதந்தோறும் 2,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக 75 சதவிகிதத்திற்கு மேல் கடும் உடல் பாதிக்கப்பட்டவர்கள், மனவளர்ச்சி குன்றியோர், முதுகு தண்டுவடம், பார்கின்சன் நோய், தண்டுவட மரப்பு, நாட்பட்ட நரம்பியல் பாதிப்பு, தசைச்சிதைவு ஆகிய நோய்கள் மற்றும் தொழுநோயால் பாதிப்படைந்தோர் என 2,11,391 பேர் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர்.

இத்திட்டத்தின் கீழ் புதிதாக விண்ணப்பித்து காத்திருப்போர் 24,951 நபர்களுக்கும் தற்போது உதவித்தொகை வழங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் பயனை தகுதியுள்ள பயனாளிகள் பெறும் வகையில், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் கீழ் பயன்பெறும் அனைத்து பயனாளிகளும் தங்களுடைய பெயருடன் ஆதார் எண், முகவரி, குறைபாட்டின் தன்மை மற்றும் சதவிகிதம், தேசிய அடையாள அட்டை எண், தங்களின் வங்கி கணக்கு எண், தொலைபேசி எண் ஆகியவற்றை அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களின் அலுவலகத்தில் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பெற்றோர்கள் கவனத்திற்கு...!வேகமாக பரவும் Noro Virus... மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்து உத்தரவு...!

Tue Jan 24 , 2023
நோரோ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து கேரளாவில் 1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் காக்கநாடு பகுதியில் உள்ள பள்ளியில் சுமார் 19 மாணவர்கள் நோரோவைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சில பெற்றோர்களுக்கும் இதே நோய் இருப்பது கண்டறியப்பட்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். இங்குள்ள காக்கநாட்டில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று குழந்தைகள் தற்பொழுது […]

You May Like