சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் புதுவை – ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசப்படும், அவ்வப்போது 85 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வட தமிழகம் புதுவை மற்றும் தெற்கு ஆந்திராவில் இன்று மற்றும் நாளை கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. இந்த மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, கடலூர், திருவாரூர், தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், தருமபுரி, திருவண்ணாமலை, நாகை, திருச்சி, திருப்பத்தூர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் 24 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது மழையால் கரூர், தூத்துக்குடி மாவட்ட பள்ளிக கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கிருஷ்ணகிரி, தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் மற்றும் சிறுமலை பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு இன்று மற்றும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.