தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலையை அதிகரித்து காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது. அதாவது தமிழகம், புதுவை போன்ற பகுதிகளில் இன்று மற்றும் நாளை அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ஒரு சில பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு நகரத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.