fbpx

இன்று அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. இந்த மாவட்டங்களுக்கு மட்டும் தான்..

ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று 4 உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆடி மாதம் 18-ம் நாள் ஆடிப்பெருக்கு அல்லது ஆடி 18 என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் நாளை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது.. காவிரி ஆறு ஓடும் மாவட்டங்களில் வசிக்கும் மக்கள், கோவில்களுக்கு சென்றும், நீர்நிலைகளுக்கு சென்றும் வழிபாடு நடத்துவர். பொதுவாக ஆடிப்பெருக்கு நாளில் காவிரி பெருக்கெடுத்து ஓடுவது போல, வாழ்விலும் சந்தோஷம் பெருக வேண்டும் என்பதற்காக காவிரி தாயை மக்கள் வழிபடுவது வழக்கம். நாளைய புதுமணத் தம்பதிகள், பொதுமக்கள் கருகுமணி, வளையல், காப்பரிசி, கண்ணாடி, பழவகைகளை வைத்து, தங்கள் வாழ்வு வளம் பெற காவிரி அன்னைக்கு வழிபாடு நடத்துவார்கள்..

இந்நிலையில் இன்றைய தினம் ஆடிப்பெருக்கை முன்னிட்டு தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. எனவே அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளைய விடுமுறையை ஈடுகட்ட ஆகஸ்ட் 27-ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு.. இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை..

Wed Aug 3 , 2022
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது… எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை உறவினர்கள், நண்பர்களுக்கு சட்டவிரோதமாக வழங்கி ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக கடந்த 2018ஆம் ஆண்டு திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தார். இதையடுத்து, புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், […]

You May Like