மாங்கனி திருவிழாவை ஒட்டி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தியாகிகளின் நினைவு நாள், திருவிழாக்கள், சிறப்பு பண்டிகைகள் போன்ற தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.. அந்த வகையில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் சிவபெருமானே அம்மையே என்றழைத்த, காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா, ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் எளிமையான முறையில் நடந்த விழா இந்த ஆண்டு சிறப்பாக நடைபெற்றது.. அதன்படி நேற்று முன் தினம் மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கிய விழாவில் நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது..
விழாவின் முக்கிய நிகழ்வான மாங்கனி திருவிழா இன்று நடைபெற உள்ளது.. மிகவும் பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் கோயில் மாங்கனி திருவிழாவை முன்னிட்டு இன்று (13.07.2022) அரசு, அலுவலகங்கள் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த விடுமுறைக்கு பதில் வரும் சனிக்கிழமை அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது…