fbpx

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…! இன்று ஒரு நாள் மட்டும் தான்..‌‌. சென்னை போக்குவரத்து போலீசார் முக்கிய அறிவிப்பு…!

இது குறித்து சென்னை போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்; சுதந்திர தின அணிவகுப்பு நடைபெற உள்ளதால் இன்று போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது; அதன்படி, நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச்சின்னம் வரை அமைந்துள்ள காமராஜர் சாலை, போர் நினைவுச்சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதிவரை அமைந்துள்ள இராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலை ஆகிய சாலைகளில் அனைத்து வாகனங்களின் போக்குவரத்தும் தடை செய்யப்படும்.

காமராஜர் சாலையிலிருந்து இராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் சுவாமி சிவானந்தா சாலை, அண்ணாசாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை (NFS Road) வழியாக பாரிமுனையை வந்து அடையலாம்.

பாரிமுனையிலிருந்து இராஜாஜி சாலை வழியாக காமராஜர் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வடக்கு கோட்டை பக்க சாலை (NFS Road) ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை, EVR சாலை, பல்லவன் சாலை, அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை சென்றடையலாம்.

அண்ணா சாலையிலிருந்து கொடிமரச்சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் வாலஜா சிக்னல் சந்திப்பு, முத்துசாமி பாலம், ராஜா அண்ணாமலை மன்றம், NFS சாலை வழியாக பாரிமுனையை சென்றடையலாம் என போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Vignesh

Next Post

சூப்பர் திட்டம்...! 2 பெண் குழந்தை உள்ளவர்களுக்கு மட்டுமே...! ஆசிரியர் சிறப்பு முகாம் அறிவிப்பு...!

Tue Aug 15 , 2023
சேலம் மாவட்டத்தில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் செவ்வாய் கிழமை அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு திட்ட பணிகளை மேற்கொள்ள […]

You May Like