fbpx

தமிழகம் முழுவதும் பத்திர பதிவு அலுவலகங்களில் இன்று ஒரு நாள் மட்டும்…! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு

ஆவணி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன் ஒதுக்கீடு செய்வது வழக்கம். தற்போது ஆவணி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினமான இன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

இதனை ஏற்று ஆவணி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினமான இன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக வில்லைகளும் பொதுமக்களின் 4 தட்கல் முன்பதிவு பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

English Summary

Today is only one day in deed registration offices across Tamil Nadu

Vignesh

Next Post

Mpox!. 21 நாட்கள் தனிமைப்படுத்தல், கட்டாய சோதனை!. உயர் எச்சரிக்கையில் இந்தியா!. பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கட்டுப்பாடு அமல்!

Mon Sep 16 , 2024
21 Days Quarantine, Mandatory Test: Bengaluru Airport On High Alert Amid Mpox Outbreak

You May Like