இன்று புரட்டாசி மாதம் பிறந்துள்ள நிலையில், பௌர்ணமியும் வருகிறது. உங்கள் வீட்டில் சகல செல்வங்களையும், செளபாக்கியங்களையும் பெறுவதற்கு இன்று வீட்டில் பூஜை செய்து வழிபட்டு பாருங்கள். பிறகு இந்த வழிபாட்டின் மகத்துவத்தை நீங்கள் நிச்சயமாக உணர்வீர்கள். உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கூட இந்த பெளர்ணமி பூஜையின் பெருமையைச் சொல்லுங்கள்.
பொதுவாகவே பெளர்ணமி தினங்கள் விசேஷமானவை. முழு நிலவு போல வாழ்க்கையும் பிரகாசமாக இருக்கும். அதனால், பெளர்ணமி தினத்தில் வழிபட மறக்க வேண்டாம். குறிப்பாக, முன்னோர் பூஜைகளையும், குல தெய்வ வழிபாட்டையும் பெளர்ணமியில் செய்து வந்தால், ஏராளமான பலன்கள் கிடைக்கும். மாதத்தில் ஒரு நாள் பெளர்ணமி வருகிறது. வானில் முழு நிலவு பிரகாசமாகத் தோன்றும் அற்புதமான நாள். இந்நாளில் செய்யப்படும் பிரார்த்தனைகள் நல்ல அதிர்வலைகளை ஏற்படுத்துமாம்.
இந்த தினத்தில் அம்பிகையை மனதில் வேண்டி வழிபாடு செய்வதும், பூஜை செய்வதும் சிறப்பானதாகும். பௌர்ணமி நாளில் வீட்டிலும், குலதெய்வ கோயிலிலும் விளக்கேற்றி வழிபடலாம். பௌர்ணமியில் அம்மன் கோவில்களில் விளக்குப் பூஜை, அன்னதானம், சிறப்புப் பூஜைகள் செய்யலாம். பெளர்ணமி தினத்தன்று அம்மனை முழு மனதாக வழிபட்டு, எந்தவொரு காரியத்தைத் துவங்கினாலும் வெற்றி தான். மயிலை கற்பகம்மாள், திருவெற்றியூர் வடிவுடையம்மன், திருகடையூர் அபிராமி என சாந்தமான அம்மனை பெளர்ணமியில் தொடர்ந்து வழிபட்டு வாருங்கள். உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஏதேனும் ஒரு அம்மன் கோயிலுக்கு தவறாம பெளர்ணமி தினத்தில் வழிபடுங்கள்.
வீட்டில் வழிபடும் முறை
பௌர்ணமி தினத்தில் மாலை நேரத்தில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றி உங்களால் இயன்ற நைவேத்தியம் படைத்து குங்குமம் அல்லது மஞ்சள் கொண்டு 108 முறை அர்ச்சிக்க வேண்டும். இப்படி செய்வதால், மாங்கல்ய பலம் கூடும். நீடித்த ஆயுளும், ஆரோக்கியமும் கிட்டும். சந்தானப் பேறு, தனலாபம் பெருகும். கல்வியில் மேன்மை அடையலாம்.
Read More : 7 கிலோ வரை சட்டென குறையும் உடல் எடை..!! பிரபல நடிகை சொன்ன ரகசியம்..!!