India Post-இல் காலியாகவுள்ள 21,413 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில், இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விருப்பமுள்ளவர்கள் இன்றைக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
காலிப்பணியிடங்கள் :
Gramin Dak Sevak (GDS), கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM) மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM) பணிக்கு மொத்தம் 21,413 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி :
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், Local language கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயதானது 18 இருக்க வேண்டும். அதிகபட்சமாக 40-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் :
* Assistant Branch Post Master பதவிகளுக்கு ரூ.10,000 முதல் ரூ.24,470 வரையும் சம்பளமாக வழங்கப்படும்.
* Branch Post Master பதவிகளுக்கு ரூ.12,000 முதல் ரூ.29,380 வரையும் சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் (Merit list) தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
* விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, அதை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
* 03.03.2025 பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
* பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதனை 06.03.2025 முதல் 08.03.2025ஆம் தேதிக்குள் திருத்திக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம் :
இதற்கு விண்ணப்ப கட்டணமாக 100 ரூபாய் செலுத்த வேண்டும். SC, ST, PWD, பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 03.03.2025
கூடுதல் விவரங்களுக்கு : https://www.careerpower.in/blog/wp-content/uploads/2025/02/11103946/India-Post-GDS-Recruitment-2025-Notification-PDF.pdf
Read More : ’தேர்வில் வென்று சிகரம் தொட வேண்டும்’..!! 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்..!!