தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம்(TAFCORN) தற்போது காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்தவர்கள் வேலைவாய்ப்பு தேடி வருபவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான சம்பளம், வயது, கல்வித்தகுதி குறித்த விவரங்களை பார்ப்போம்.
தமிழ்நாடு வனத் தோட்டக் கழகத்தில்(TAFCORN) Computer Programmer பணிக்கு காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.Computer Programmerல் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதியாக அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Masters Degree in Computer Application, Masters Degree in Science ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலி பணியிடங்களில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.36,400 முதல் ரூ.1,15,700 வரை மாத ஊதியம் வழங்க இருப்பதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம்(TAFCORN) பணிக்கு நேர்காணல் நடத்தப்பட்டு அதன் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த காலி பணியிடங்களில் விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து,05.10.2022 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://www.tafcorn.tn.gov.in/