fbpx

4 ஆண்டு ஆசிரியர் படிப்புக்கான NCET நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!

ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் படிப்புக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி.

ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் பட்டப் படிப்புகளில் சேர தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வில் (என்சிஇடி) தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வு கணினி வாயிலாக ஏப்ரல் 29-ம் தேதி நடத்தப்படவுள்ளது. இதற்காக நாடு முழுவதும் 178 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 20-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் மார்ச் 31-ம் தேதி இரவு 9 மணி வரை நீட்டிக்கப்பட்டது. இதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. விருப்பமுள்ளவர்கள் https://exams.nta.ac.in/NCET/ எனும் வலைத்தளம் வழியாக உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்.

ஹால்டிக்கெட் வெளியீடு உட்பட கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது ncet@nta.ac.in மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

English Summary

Today is the last day to apply for the NCET entrance exam for 4-year teacher training courses.

Vignesh

Next Post

பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு..!! 1% கட்டண குறைப்பு நாளை முதல் அமல்..!! பதிவுத்துறை செயலர் சூப்பர் அறிவிப்பு..!!

Mon Mar 31 , 2025
The Tamil Nadu government had announced that there would be a 1% reduction in the registration fee for deeds registered in the name of women, and this announcement will come into effect from tomorrow, Registration Secretary Kumar Jayant has said.

You May Like