fbpx

Election 2024: வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்…!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்.

17-வது மக்களவையின் பதவிக்காலம் 2024-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய மக்களவையை அமைப்பதற்கு தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. அரசியலமைப்பு சட்ட விதிகளைக் கருத்தில் கொண்டு, 18-வது மக்களவைக்கான தேர்தல்களை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தேர்தல் வேட்புமனு தாக்கல் 25-ம் தேதி தொடங்கியது. இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைய உள்ளது.

மார்ச் 28-ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெற உள்ளது. வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 30 ஆகும். வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறும்.

Vignesh

Next Post

M.K.Stalin: பச்சைப் பொய் பழனிசாமினு மக்கள் சும்மாவா சொன்னாங்க...! CM ஸ்டாலின் விமர்சனம்...!

Wed Mar 27 , 2024
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின், தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி மற்றும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி ஐ.யு.எம்.எல் வேட்பாளர் நவாஸ் கனி ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின்; பச்சைப் பொய் பழனிசாமினு மக்கள் சும்மாவா சொன்னாங்க.. ஊடகம் மூலமாகதான் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி தெரிந்து கொண்டதாக பழனிசாமி சொன்னது தவறானது என்று ஆணையத்தின் அறிக்கையில் வெட்ட வெளிச்சமாக சொல்லப்பட்டிருக்கு. […]

You May Like