fbpx

உலக சாக்லேட் தினம் இன்று!… சாக்லேட் பற்றிய சுவாரஸிய தொகுப்பு!…

உலக சாக்லேட் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் சாக்லேட் தொடர்பாக அறியப்படாத தகவல்களை இங்கே பகிர்கிறோம்.

எழுத்தாளர் ஜேன் சீப்ரூக் உருவாக்கிய ஃபர்ரி லாஜிக் தொடரில் இப்படியாக ஒரு வரி வரும், “சொர்க்கத்தில் சாக்லேட் இல்லையென்றால் நான் அங்கு செல்லமாட்டேன்” என்று. ஆம், இங்கு சாக்லேட் சுவையை விரும்பாமல் இருப்போர் வெகு சிலரே. பல்வேறு இசங்களை பின்பற்றுவோர் இணையும் ஒரு புள்ளி சாக்லேட்தான். பால்யகால நினைவுகளை நாம் அசைபோட்டால், ஏதோவொரு ஒரு சாக்லெட்டின் வாசனை நம் நாசியில் வந்து செல்லும். பால்யத்தில் சாக்லெட்டை கடந்து வராதவர்கள் யாரும் இலர். இன்று உலக சாக்லேட் தினம். அதனால், சாக்லேட் குறித்து சுவாரஸிய தகவல்களை இங்கு பார்ப்போம்.

சாக்லேட் தினத்தன்று தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு பிடித்த சாக்லேட் பரிசளிக்க வேண்டும் என பெரும்பாலோனோர் நினைக்கின்றனர். அது உண்மைதான். ஆனாலும் வெறும் சாக்லேட் மட்டுமல்ல, நீங்கள் அன்பான வார்த்தைகளை சொல்வது அதை விட முக்கியம். உங்களின் அன்பான வாழ்த்தும், வார்த்தையும் உங்கள் துணையை மிகுந்த தித்திப்பில் ஆழ்த்தும். நாவில் எச்சில் ஊற வைக்கும் சாக்லேட் உணவுகள், சாக்லேட்டால் ஆன பரிசுகள் கூட துணைக்கு பரிசாக கொடுக்கலாம். தொடர்ந்து சாக்லேட் வாங்கி கொடுப்பதால் அன்பு அதிகமாகும். காதல் கை கூடும் என்பார்கள். அதாவது சாக்லேட் இருவரின் உறவுக்கு பாலமாக இருக்கிறதாம். இதன் காரணமாக சிலர் மனதுக்கு பிடித்த நபருக்கு சாக்லேட்டை வாரி இறைப்பார்கள்.

சாக்லேட் கொஞ்சம் கசப்பான சுவையை நாவில் கொடுத்தாலும், மென்று அதை உண்ணும்போது அலாதியான சுவைக்கு நம்மை இழுத்து சென்றுவிடும். அப்படி தான் காதலும் நம்மை மதி மயக்கிவிடும். சாக்லேட் ஒரு மனிதரை மகிழ்ச்சியாக மாற்றும் சக்தி உடையது என நம்பப்படுகிறது. உங்களுக்கு தெரியுமா? 19 ஆம் நூற்றாண்டில் ஒரு பிரிட்டிஷ் குடும்பம் கோகோ வெண்ணெயைப் பயன்படுத்துவதற்கான வழியைத் தேடிக்கொண்டிருந்தது. அதற்கான வழியை ரிச்சர்ட் காட்பரி என்பவர் கண்டுபிடித்தார்.

விக்டோரியன் காலத்தில், அந்த வித்தையை பயன்படுத்தி ரிச்சர்ட் கேட்பரி தயாரித்த சாக்லேட்டுகளை அவர் இதய வடிவிலான பெட்டிகளில் அடுக்கி, விற்க ஆரம்பித்தார். அந்த சாக்லெட் பெட்டிகளை காதலர் தினத்தையொட்டி கொடுக்கும் வழக்கம் அதன் பிறகு தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த பாரம்பரியம் முதலில் மொரோசாஃப் என்ற சாக்லேட் விற்பனையாளரால் வணிகரீதியாக தொடங்கப்பட்டதாம்.

சாக்லேட்டின் முதன்மை பொருளான கோகோ பீன்ஸ் பல நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது. சாக்லேட்டை போலவே காதலும் நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என்பதால் சாக்லேட் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் வாரத்தின் மொத்த சுவையும் இந்த தினத்தில் தான் உண்டு என்கிறார்கள். ஏனென்றால் ஒரு சாக்லேட் முழுநாளையும் மகிழ்ச்சியாக வைத்திருக்குமாம். ஒருவருக்கொருவர் சாக்லேட் பரிமாறி வாழ்த்து தெரிவித்து கொள்வதால் அங்கு ஒரு உரையாடலுக்கு வாய்ப்பு ஏற்படும்.

உலகம் முழுக்கவே சாக்லேட் அன்பின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. இதற்கு வயதோ, பாலினமோ பாகுபாடில்லை. சாக்லேட் கொடுப்பதால் யாரை வேண்டுமானாலும் மகிழ்ச்சியில் ஆழ்த்த முடியும். மனச்சோர்வோடு இருப்பவரிடம், புன்னகையுடன் ஒரு சாக்லேட் கொடுத்து ஆதரவாக பாருங்கள். அந்த கனிவுதான் எல்லோருக்கும் தேவைப்படுகிறது. கனிவாக இருங்கள் காதலில்! உனக்கு முன் சாக்லேட்டுக்கு கொஞ்சம் சுவை குறைவுதான் தெரியுமா? தீர்ந்தே போகாத இனிமை நீ! அனைவருக்கும் சாக்லேட் தின வாழ்த்துகள்.

Kokila

Next Post

அதிமுக அமைச்சர்களின் ஊழல் வழக்கை விசாரிக்க அனுமதி...! ஆளுநர் சட்ட அமைச்சர் ரகுபதி கடிதம்...!

Fri Jul 7 , 2023
அதிமுக அமைச்சர்களின் ஊழல் வழக்கை விசாரிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி விரைந்து இசைவாணை வழங்க வேண்டும் என அமைச்சர் ரகுபதி வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்”முன்னாள்‌ அதிமுக அமைச்சர்கள்‌ மீது உள்ள ஊழல்‌ வழக்குகளில்‌ நீதிமன்ற விசாரணையை துவக்குவதற்கு தேவையான இசைவு ஆணையை விரைந்து அனுப்புமாறும்‌, மாநில அரசு நிறைவேற்றி அனுப்பியுள்ள சட்ட மசோதாக்களுக்கு விரைவில்‌ ஒப்புதல்‌ அளிக்குமாறும்‌ தமிழ்நாடு ஆளுநர்‌ அவர்களுக்கு 3.7.2023 அன்று […]

You May Like